பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படம் பக்கா மாஸ் குடும்ப படமாக உருவாகுவதாக பாண்டிராஜ் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.
படம் பற்றி இயக்குநர் பாண்டிராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, உங்கள் தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா, அத்தை, மாமா, மச்சான், அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பையன், மாமன் பொண்ணு, இந்த சொந்தங்களை மொத்தமாக திரையில் காண துவக்கம் என்று குறிப்பிட்டு, இந்த படம் பக்கா மாஸ் குடும்ப படமாக உருவாகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகிகளாக அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா

உள்ளிட்டோரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும், வீரசமர் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்
உங்கள்
அண்ணன்,தம்பி
தாத்தா,பாட்டி
அக்கா,தங்கை,
சித்தப்பா,பெரியப்பா
சின்னம்மா,பெரியம்மா
அத்தை,மாமா,மச்சான்,
அத்தைபையன்,அத்தைபொண்ணு,
மாமன்பையன்,மாமன்பொண்ணு
இந்த சொந்தங்களை மொத்தமாக திரையில் காண
இன்று துவக்கம் 😁🙏 #PakkaFamilyMassEntertainer @Siva_Kartikeyan @sunpictures pic.twitter.com/bKVDyL7xLF — Pandiraj (@pandiraj_dir) May 8, 2019