www.garudabazaar.com

நீடூழி வாழ்க மாமன்னனே.. வடிவேலுவுக்கு வெச்ச வேறலெவல் ட்ரீட் .. அசத்திய உதய் - மாரி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு.

Vadivelu Birthday Celebration in Maamannan Set Udhayanidhi Stalin

Also Read | வடிவேலு நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'.. தலைவன் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

Vadivelu Birthday Celebration in Maamannan Set Udhayanidhi Stalin

தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,  பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ் குமரன் மற்றும் மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி  கொண்டாடினார். அனைவரும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் வடிவேலுவிற்கு தெரிவித்தனர்.

Vadivelu Birthday Celebration in Maamannan Set Udhayanidhi Stalin

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

Vadivelu Birthday Celebration in Maamannan Set Udhayanidhi Stalin

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் மார்ச்-4 ல் துவங்கி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vadivelu Birthday Celebration in Maamannan Set Udhayanidhi Stalin

இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு, சிறிது இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

Also Read | BREAKING: தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா? செம்ம..

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu Birthday Celebration in Maamannan Set Udhayanidhi Stalin

People looking for online information on Maamannan set, Udhayanidhi Stalin, Vadivelu, Vadivelu Birthday Celebration will find this news story useful.