Sinam D Logo Top
www.garudabazaar.com

மாரி செல்வராஜின் 'மாமன்னன்'.. வைரலாகும் வடிவேலுவின் BTS போட்டோ..! சூப்பர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு BTS புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Vadivelu Keerthy Suresh Wrapped Mamannan Movie Shooting

Also Read | தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்'.. போட்டோ வெளியிட்டு செல்வராகவன் கொடுத்த சூப்பர் அப்டேட்!

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

Vadivelu Keerthy Suresh Wrapped Mamannan Movie Shooting

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் மார்ச்-4 ல் துவங்கி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது.

Vadivelu Keerthy Suresh Wrapped Mamannan Movie Shooting

தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு நேற்று தனது பிறந்தநாளை  மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி  கொண்டாடினார்.

இச்சூழலில் நடிகர் வடிவேலு, மாமன்னன் படப்பிடிப்பின் போது நடிகை கீர்த்தி சுரேஷின் நாய்க்குட்டி Nyke-ஐ தூக்கி வைத்து கொஞ்சுவது போல BTS புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது. மேலும் நேற்றுடன் வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Vadivelu Keerthy Suresh Wrapped Mamannan Movie Shooting

நடிகர் வடிவேலு, சிறிது இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் "நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்" படத்திலும் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் PS1 நடிகர்கள்.. யாரெல்லாம் வராங்க? விக்ரம் கொடுத்த அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu Keerthy Suresh Wrapped Mamannan Movie Shooting

People looking for online information on Keerthy Suresh, Mamannan, Mamannan Movie Shooting, Mari Selvaraj, Vadivelu will find this news story useful.