www.garudabazaar.com

BIGGBOSS: ஏலியன் பழங்குடி டாஸ்க்.. ஆத்திரமடைந்து வீட்டை அடித்து நொறுக்கிய ஆயிஷா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

BIGGBOSS Season 6 Tamil Ayesha Angry Moment

Also Read | “Friends-ஆ? நரிக்கூட்டம்” .. ஹவுஸ்மேட்ஸ் குறித்து ராபர்ட் மாஸ்டர் சொன்னது என்ன? bigg boss 6

இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.

BIGGBOSS Season 6 Tamil Ayesha Angry Moment

பொம்மை டாஸ்க், அரசவை, அருங்காட்சியகம் டாஸ்க், கோர்ட் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி இருந்தது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள்  பங்கேற்றனர்.

BIGGBOSS Season 6 Tamil Ayesha Angry Moment

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

BIGGBOSS Season 6 Tamil Ayesha Angry Moment

இதனைத் தொடர்ந்து இந்த வாரம், பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் எனும் டாஸ்க் போட்டியாளர்களுக்கு தரப்பட்டுள்ளது. இதில் வெளியே நிற்கும் பழங்குடி வாசிகள், ஏலியன்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள். இதை ஏலியன்ஸ் ஆன ரச்சிதா மற்றும் ஆயிஷா தடுக்கின்றனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட ஆயிஷா ஆத்திரமடைந்து கதவை மூடுகிறார். அப்போது கைப்பிடி உடைந்து விடுகிறது. கைப்பிடி உடைந்த நிலையில் அதை மாட்டிவிட்டு ஆயிஷா ரூமுக்குள் சென்று கையில் இருக்கும் பொருளை சுவற்றில் அடிக்கிறார். இந்த சூழ்நிலையில் ஆயிஷாவை சமாதானம் செய்ய காட்டுவாசி அணியில் இருந்து கதிரவன் மற்றும் மைனா செல்கின்றனர். இருப்பினும் சமாதானம் ஆகாத ஆயிஷா, "யார் மீதும் கோபம் இல்லை. ‌கொஞ்சம் தனியாக இருக்க விடுங்கள்" என கேட்கிறார்.

Also Read | பிரபல OTT-யில் REMASTERED செய்யப்பட்டு ரிலீஸாகும் 'வாரணம் ஆயிரம்'.. எப்போ? எதுல?

BIGGBOSS: ஏலியன் பழங்குடி டாஸ்க்.. ஆத்திரமடைந்து வீட்டை அடித்து நொறுக்கிய ஆயிஷா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

BIGGBOSS Season 6 Tamil Ayesha Angry Moment

People looking for online information on Ayesha, Ayesha Angry Moment, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv will find this news story useful.