www.garudabazaar.com

"வடிவேலு சார் சொன்னது கரெக்டா இருக்கு".. மல்லாக்க படுத்துகிட்டே ஜிபி முத்து பாடிய பாட்டு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக சென்று கொண்டிருக்கிறது.

GP Muthu sing a song and speak about vadivelu dialogue

Also Read | BB6 Tamil : "ரொம்ப நல்ல புள்ள, எனக்கு முன்னாடியே தெரியும்".. தனலட்சுமி பற்றி ஜிபி முத்து!!

விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.

மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனால் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த விஷயங்கள், இணையத்தில் எப்போதுமே ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பித்த பிக்பாஸ் 6 ஆவது சீசன், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் அணியாக பிரிந்த பிறகு, ஏகப்பட்ட பிரச்சனைகள் மற்றும் விவாதங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது.

GP Muthu sing a song and speak about vadivelu dialogue

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொள்கிறது. உள்ளே எந்த அளவுக்கு பிரச்சனைகள் இருந்தாலும் தொடர்ந்து ஜிபி முத்து செய்து வரும் விஷயங்கள், பலரது ஆதரவினையும் பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜிபி முத்து, எப்போதும்  கலகலப்பாக இருந்தாலும் தான் நடிப்பதாக தனலட்சுமி குறிப்பிட்டதை எண்ணி கண்ணீர் விடவும் செய்திருந்தார்.

தனலட்சுமி அப்படி குறிப்பிட்டதும் இருந்த இடத்தில் இருந்து வேகமாக ஜிபி முத்து எழ, பதிலுக்கு தனலட்சுமியும் எப்படி எகிற வருகிறீர்கள் என கேட்டு கோபம் அடைந்தார். இதன் பின்னர், தனலட்சுமியின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என ஜனனி வெளிப்படையாக சக போட்டியாளர்கள் முன்பு கூற, கண்ணீர் வடிக்கவும் ஆரம்பித்தார் தனலட்சுமி.

GP Muthu sing a song and speak about vadivelu dialogue

இதனைத் தொடர்ந்து, ஜிபி முத்துவிற்கு  ஆதரவாக பேசியதற்காக ஜனனியிடம் விக்ரமன் கேள்விகளை அடுக்க அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், படுத்துக் கொண்டே ஜிபி முத்து பேசும் வடிவேலு வசனம் மற்றும் பாடல் தொடர்பான பதிவுகள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே படுத்துக் கொண்டு மேலே பார்க்கும் ஜிபி முத்து, "வானத்தை பாத்துட்டு மல்லாக்க படுக்குற சுகம்ன்னு வடிவேலு சார் சொன்னது கரெக்ட்டா இருக்கு" என கூறிக் கொண்டே "பொட்டு வெச்ச தங்கக் குடம், ஊருக்கு நீ மகுடம்" என்ற பாட்டையும் அசத்தலாக பாடிய படி இருக்கிறார்.

தன்னை சுற்றி சில பிரச்சனைகள் பரவி வந்த போதிலும் அதனைக் கடந்து தன்னுடைய இயல்பிலேயே ஜிபி முத்துக்கு இருப்பது ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Also Read | Bigg Boss 6 Tamil :"நீங்க அப்டி சொன்னது தப்பு".. ஜனனியுடன் வாக்குவாதத்தில் விக்ரமன், தனலட்சுமி!!

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu sing a song and speak about vadivelu dialogue

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Vijay tv will find this news story useful.