Buffoon D logo top
Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

VIDEO: திருச்செந்தூரில் நடிகர் வடிவேலு.. முருகன் கோயிலில் வேல் சாற்றி வழிபாடு! வைரல் போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேலு.

Actor Vadivelu Visited Thiruchendur Murugan Temple

Also Read | சமந்தா நடிக்கும் PAN INDIA புராணத் திரைப்படம்.. ரிலீஸ் எப்போ? சூப்பர் போஸ்டருடன் வெளியான அப்டேட்!

இவரது காமெடிகள் காலங்கள் கடந்து இன்றும் கொண்டாடப்படுகிறது. தற்போது நடிகர் வடிவேலு, மாமன்னன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  தயாரித்து வரும் இந்தப்படம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

Actor Vadivelu Visited Thiruchendur Murugan Temple

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Actor Vadivelu Visited Thiruchendur Murugan Temple

இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது. மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actor Vadivelu Visited Thiruchendur Murugan Temple

மேலும் பி.வாசு இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலு, ராகவா லாரன்ஸ் மற்றும் ராதிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடிகர் வடிவேலு வந்துள்ளார். கோயிலில் முருகனுக்கு வேல் சாற்றி வழிபாடு செய்த பின்னர் ரசிகர்களுடனும் பத்திரிகையாளர்களுடனும் கலந்துரையாடல் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | புது லுக்கில் நடிகர் விஜய் சேதுபதி.. பிரபல நடிகர் இயக்குனருடன் சந்திப்பு.. வைரல் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vadivelu Visited Thiruchendur Murugan Temple

People looking for online information on Thiruchendur Murugan Temple, Vadivelu, Vadivelu Visits Thiruchendur Murugan Temple will find this news story useful.