Silence... - அனுஷ்காவின் கேரக்டர் இது தான்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 11, 2019 11:24 AM
ஹேமந்த் மாதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்து வரும் ‘நிசப்தம்’ திரைப்படத்தில் அனுஷ்காவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘பாகமதி’ திரைப்படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் ‘நிசப்தம்’ திரைப்படத்தில், அனுஷ்காவின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வாய் பேசாத காது கேளாத ஆர்ட்டிஸ்ட்டாக நடித்துள்ளார். சாக்ஷி என்ற கதாபத்திரத்தில் அனுஷ்கா ஓவியம் வரைவது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘இரண்டு’ படத்திற்கு பிறகு ‘நிசப்தம்’ படத்தில் மீண்டும் மாதவனுடன் அனுஷ்கா இணைந்து நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பா ராஜு, மைக்கேல் மேட்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்றது.
கோனா வெங்கட் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பாக டி.ஜி.விஸ்வபிரசாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருக்கிறது.
— KonaFilmCorporation (@KonaFilmCorp) September 11, 2019