எஸ்.ஏ.சி மற்றும் ஜெய்யின் 'கேப்மாரி'யில் இருந்து அனிருத் பாடிய பாடல் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 13, 2019 06:06 PM
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் அவரது 70வது படமாக உருவாகியிருக்கும் படம் கேப்மாரி. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இது நடிகர் ஜெய்யின் 25 படமாகும்.

இந்த படத்தில் சத்யன், தேவதர்ஷினி, விவிங்ஸ்டன், பவர் ஸ்டார், சித்தார்த் விபின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஜீவன் இந்த பாடலுக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து உம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.
எஸ்.ஏ.சி மற்றும் ஜெய்யின் 'கேப்மாரி'யில் இருந்து அனிருத் பாடிய பாடல் இதோ வீடியோ
Tags : Capmaari, SA Chandrasekar, Jai, Anirudh Ravichander