எஸ்.ஏ.சி இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள 'கேப்மாரி' பட டிரெய்லர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 03, 2019 06:08 PM
‘டூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் 'கேப்மாரி' என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா மற்றும் வைபவி ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அடல்ட் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்திற்கு தற்போது தணிக்கைக்குழு ‘ஏ’சான்றிதழை வழங்கியுள்ளது.
இந்த படம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் 70வது திரைப்படம் என்பதும், நடிகர் ஜெய்க்கு இது 25வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.
எஸ்.ஏ.சி இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள 'கேப்மாரி' பட டிரெய்லர் இதோ வீடியோ
Tags : SA Chandrasekar, Jai, Athulya Ravi, Vaibhavi Shandilya