''S a c-C M ஆகி S e x பற்றியும்......'' - 'கேப்மாரி' டிரெய்லர் குறித்து பார்த்திபன் கமென்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து இயக்கியிருக்கும் படம் கேப்மாரி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா மற்றும் வைபவி ஆகியோர் நடித்துள்ளனர்.

Parthiban comments about SA Chandrasekar's Capmaari Trailer

மேலும் இந்த படத்தில் சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன், சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த படம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் 70வது திரைப்படம் என்பதும், நடிகர் ஜெய்க்கு இது 25வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருந்தார்.இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் குறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''S a c-C M ஆகி S e x பற்றியும், Life பற்றியும் கடல் அளவு Deep ஆக அலசி,ஜெய்'க்க தன் 'மன வய'தில்' உள்ள குளிர் சாதன குட்டிகளை வைத்து 'புள்ளைங்கோ' நெஞ்சில் Temperature அதிகப்படுத்துகிறார். உ'தட்டில் 'Gap' இல்லாமல் மாறி 'மாரி'இட்டு நிரப்புகிறார் இளமை லேகியத்தை'A'' என்று குறிப்பிட்டுள்ளார்.