Breaking News - சூப்பர் ஹீரோவாக 'சுறா', 'வேதாளம்' வில்லன்களுடன் மோதும் ஜெய்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 06, 2019 01:03 PM
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் கேப்மாரி. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா, வைபவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

இந்த படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து ஜெய் நடித்து வரும் படம் பிரேக்கிங் நியூஸ். இந்த படத்தில் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை அந்நியன், முதல்வன், சிவாஜி படங்களுக்கு விஷூவல் எஃபெக்ட்ஸ் துறையில் பணியாற்றிய அண்ட்ரோ பாண்டியன் டைரக்ட் செய்கிறார்.
இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக பானு என்ற புதுமுகம் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சுறா படத்தில் வில்லனாக நடித்த தேவ்கில், வேதாளம் பட வில்லன் ராகுல் தேவ் உள்ளிட்டோர் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்கின்றனர்.
மேலும், இந்த படத்தில் இந்தரஜா, சந்தனா பாரதி, மோகன் ராம், பழ.கருப்பையா, பி.எல்.தேனப்பன், மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.