www.garudabazaar.com

படம் நடிப்பதை நிறுத்திய பிறகு ரிலீஸாகும் உதயநிதியின் முதல் திரைப்படம்..! த்ரில் டிரெய்லர்...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கண்ணை நம்பாதே திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களுடைய கவனத்தைப் பெற்று இருக்கிறது.

Udhayanithi Stalin Starrer kannai nambathey

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அடுத்த துல்கர் சல்மான் படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்..? ஹீரோயின் இவங்களா?.. முழு விபரம்.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய கழகத் தலைவன் திரைப்படம், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியானது. இதனிடையே மாரி செல்வராஜின் மாமன்னன் உள்ளிட திரைப்படங்களில் உதயநிதி நடித்திருந்தார். இந்த படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அந்த வரிசையில் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தை எடுத்த மு. மாறன் இயக்கத்திலான கண்ணை நம்பாதே திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது.

Udhayanithi Stalin Starrer kannai nambathey

Images are subject to © copyright to their respective owners.

பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா, ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சித்துக்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Udhayanithi Stalin Starrer kannai nambathey

Images are subject to © copyright to their respective owners.

அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் த்ரில்லர் அம்சத்தை கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளதை ட்ரெய்லர் மூலம் அறிய முடிகிறது. இந்த உலகத்தில் நடக்கிற எல்லா கொலைகளுக்கும் பின்னால் அழுத்தமான காரணம் இருக்கிறது என்று வாய்ஸ் ஓவருடன் தொடங்கும் இந்த ட்ரெய்லர் அதிகப்படியான இரவு காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் தன்மையை விளக்குகிறது. இந்த திரைப்படம் வரும் மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Udhayanithi Stalin Starrer kannai nambathey

Images are subject to © copyright to their respective owners.

தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விளங்கி வந்த உதயநிதி ஸ்டாலின், இனி திரைப்படங்களின் நடிக்கப் போவதில்லை என்று அண்மையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பின்னால் வெளியாக கூடிய, அதேசமயம் இந்த அறிவிப்புக்கு முன்னாள் உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படம் கண்ணை நம்பாதே திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "சூரரைப்போற்று" படத்தை தொடர்ந்து இவரது BIOPIC-ல் நடிக்கும் சூர்யா..? இயக்குநர் இந்த நடிகரா..?

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanithi Stalin Starrer kannai nambathey

People looking for online information on Udhayanithi Stalin will find this news story useful.