Reliable Software
www.garudabazaar.com

'உதயநிதிக்கு இவ்ளோ பெரிய மகனா?'.. நல்லா வளந்துட்டாரே? யாரும் பார்த்திராத வைரல் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் உதயநிதி ஸ்டாலின் திரைத்துறையில் அரசியலில் ஒரே நேரத்தில் பயணித்திருக்கிறார்.

udhayanithi stalin son unseen image goes viral trending உதயநிதி

திமுக தலைவராக மட்டுமல்லாமல் பிரபல கதாசிரியராகவும் கவிஞராகவும் அறியப்படும் மு.கருணாநிதியின் மகன் வழி பேரனான உதயநிதி ஸ்டாலின் கலைத்துறையில் நடிகராக உருவாகியிருக்கிறார். இவருடைய மனைவி கிருத்திகா உதயநிதி கலைத்துறையில் இயக்குநராக வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்.

உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி பெயரளவில் பலராலும் அறியப்பட்டவர். அவருடைய குழந்தை வயது புகைப்படங்களை பலரும் பார்த்துள்ளனர். பலரும் அறியாத இன்பநிதியின் தற்போதைய புகைப்படமும், தந்தை உதயநிதி ஸ்டாலினுடன் இன்பநிதி அமைதியான சூழலின் நடுவில் நிற்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இதை பார்க்கும்பொழுது உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி இவ்வளவு பெரிய பையனா ஆகிட்டாரா? என்று கேட்க தோன்றும் அளவுக்கு நெடுநெடுவென வளர்ந்து இருக்கிறார். அத்துடன் மிகவும் ஸ்டைலாகவும் பாடலாகவும் தெரியும் எங்க இருக்கு பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் ஹிந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற Article15 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை ஸீ ஸ்டுடியோஸ் மற்றும் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவாங்கி நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜையில் நடிகர் விவேக்கிற்கு மௌன அஞ்சலி செலுத்திய பிறகு உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

udhayanithi stalin son unseen image goes viral trending உதயநிதி

People looking for online information on Article 15, Udhayanidhi Stalin will find this news story useful.