www.garudabazaar.com

KH234: கமல் - மணிரத்னம் - ARR தெறிக்கவிடும் காம்போ.. இணையும் உதயநிதி.. சம்பவம் Loading

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அவரது 234வது படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார். 

Maniratanam kamal hassan AR Rahman KH234 Udhayanithi Stalin

ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பாக மணிரத்னம் நாயகன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அண்மையில் மணிரத்னம் இயக்கத்திலான பொன்னியின் செல்வன் பாகம்-1 பிரம்மாண்ட சரித்திர புனைவு படமாக வெளியாகி வரவேற்பையும் வசூலையும் குவித்தது,

கமல் நடிப்பிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக கமல்ஹாசனுக்கு அமைந்தது. இந்நிலையில்தான் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படமான கமல்ஹாசனின் 234வது படத்தினை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார். 

Maniratanam kamal hassan AR Rahman KH234 Udhayanithi Stalin

இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், சிவா ஆனந்த் ஆகியோர் தயாரிக்கின்றனர். 

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு பிரம்மாண்ட காம்போவை கண்முன் கொண்டு வந்துள்ளதாகவும், இப்போதே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Maniratanam kamal hassan AR Rahman KH234 Udhayanithi Stalin

People looking for online information on AR Rahman, Kamal Haasan, Mani Ratnam, RajKamal International, Udhayanidhi Stalin will find this news story useful.