Veetla Vishesham Others Page USA

“எல்லாரும் சமம்னா யார் சார் ராஜா…?” வெளியானது ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் OTT டீசர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெஞ்சுக்கு நீதி படத்தின் புதிய ஓடிடி டீசர் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

udhayanidhi Nenjukku needhi movie ott release new teaser

நெஞ்சுக்கு நீதி…

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில்  உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ’நெஞ்சுக்கு நீதி’ படம் மே 20  ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படத்தில் உதயநிதியோடு, ஆரி, தன்யா ராஜேந்திரன், மயில்சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர்.

ரிலீஸுக்குப் பின்…

தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆன பின்பு உதயநிதியின் முதல் படமாக ரிலீஸ் ஆனது. முன்னதாக இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கின. கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் தலைப்பான ‘நெஞ்சுக்கு நீதி’ யை படத்துக்கு வைத்துள்ளது கூடுதல் கவனத்தைப் பெற்றது. ரிலீஸூக்குப் பின்னர் பரவலாக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்த திரைப்படம் திரையுலகினரின் பாராட்டுகளையும் குவித்தது. சமீபத்தில் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்த நிலையில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

udhayanidhi Nenjukku needhi movie ott release new teaser

ஓடிடி ரிலீஸ்…

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து இந்த திரைப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. பிரபல ஓடிடி தளமான சோனி லைவில் வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் ஓடிடி பிரீமியருக்கு இன்னும் இரு தினங்கள் இருக்கும் நிலையில் படத்தின் புதிய டீசரை தற்போது சோனி லிவ் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபகாலமாக ஓடிடிக்காக படங்களின் புதிய டிரைலர்கள் உருவாக்கப்பட்டு அவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்

udhayanidhi Nenjukku needhi movie ott release new teaser

People looking for online information on Arunraja Kamaraja, Nenjukku needhi will find this news story useful.