"முட்களில் நடந்த சிவகார்த்திகேயன்"... 'கனா' அருண்ராஜா காமராஜ் எமோஷனல் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் 8 ஆண்டுகளை நிறைவு செய்யும் சிவகார்த்திகேயனுக்கு அருண்ராஜா காமராஜ் எமோஷனல் மெசேஜ் ஒன்றை தெரிவித்துள்ளார்.

arunraja kamaraja's emotional note on sivakarthikeyan 8 year run

சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். டிவி சேனல் நிகழ்ச்சிகளில் நடித்து கொண்டிருந்த சிவகார்த்திகேயனை மெரினா படத்தில் இயக்குநர் பாண்டிராஜ் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், ரஜினி முருகன் என தனது காமெடியால் சினிமா ரசிகர்களை கவர்ந்தார் சிவகார்த்திகேயன். நம்மவீட்டுப்பிள்ளை, ஹீரோ போன்ற படங்கள் மூலம் முன்னணி நட்சத்திரமாக அவர் உயர்ந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் இன்றோடு 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

இதையடுத்து கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், 'காலமே நமக்கு அன்பு செலுத்த, வெற்றிப்பெற, கற்றுக்கொள்ள, வாழ்வில் உயர கற்றுகொடுக்கிறது. நீ அமைத்த பாதை இல்லையெனில், என்னுடைய பயணம் அமைந்திருக்காது. எனக்கு முன்னால் நீ சென்று,  முட்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு, என் பாதையில் வெறும் பூக்களை மட்டுமே விட்டுச்சென்றாய், Love you' என அவர் பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயனும் அருண்ராஜா காமராஜும் சின்னத்திரை காலத்தில் இருந்தே பழகி வருவதுடன், அருண்ராஜாவின் 'கனா' படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor