Reliable Software
www.garudabazaar.com

மரணம்!! அருண்ராஜா காமராஜாவின் மனைவி உயிரிழந்தார்... பெரும் அதிர்ச்சியில் திரையுலகம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் அருண் ராஜா காமராஜா பன்முகத் திறமை கொண்டவர். இன்று இளம் நடிகராக வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயனின் நண்பரான அருண்ராஜா காமராஜா தொடக்ககாலத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

Arunraja kamaraja wife passed away covid அருண்ராஜா காமராஜா

தொடர்ந்து திரைத்துறையில் நடிகராகவும் வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் வலம் வந்த அருண்ராஜா காமராஜா சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கனா என்னும் தம்முடைய கனவு திரைப்படத்தை இயக்கினார்.

இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து  போனி கபூரின் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பிலான இந்தி படமான ஆர்டிகள் 15 படத்தினை உதயநிதி ஸ்டாலினை வைத்து தமிழில் இயக்குவதற்கு அருண்ராஜா காமராஜா தயாரானார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் தொடங்கியது.

இந்த நிலையில்தான் அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி இந்த தகவலை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து பலரும் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வந்தனர்.

Arunraja kamaraja wife passed away covid அருண்ராஜா காமராஜா

தொடர்ந்து திரைத்துறையினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையினரும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இப்படி அடுத்தடுத்து மரணிப்பது பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Arunraja kamaraja wife passed away covid அருண்ராஜா காமராஜா

People looking for online information on Arunraja Kamaraj, Arunraja Kamaraja will find this news story useful.