Veetla Vishesham Others Page USA

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’… பிரபல ஓடிடியில் ரிலீஸ்… எப்போது? முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Nenjukku needhi OTT streaming date announced by sony liv

Also Read | இந்த வாரம் தியேட்டர் & OTT-ல் ரிலீஸாகும் தமிழ் படங்கள் & சீரிஸ்… ஒரு பார்வை

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில்  உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ’நெஞ்சுக்கு நீதி’ படம் மே 20  ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படத்தில் உதயநிதியோடு, ஆரி, தன்யா ராஜேந்திரன், மயில்சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர்.

நெஞ்சுக்கு நீதி ரிலீஸ்…

தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆன பின்பு உதயநிதியின் முதல் படமாக ரிலீஸ் ஆனது. முன்னதாக இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கின. கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் தலைப்பான ‘நெஞ்சுக்கு நீதி’ யை படத்துக்கு வைத்துள்ளது கூடுதல் கவனத்தைப் பெற்றது. ரிலீஸூக்குப் பின்னர் பரவலாக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்த திரைப்படம் திரையுலகினரின் பாராட்டுகளையும் குவித்தது. சமீபத்தில் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்த நிலையில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Nenjukku needhi OTT streaming date announced by sony liv

ஓடிடி ஸ்ட்ரீமிங்…

இந்நிலையில் இப்போது திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து இந்த திரைப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. பிரபல ஓடிடி தளமான சோனி லைவில் வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Nenjukku needhi OTT streaming date announced by sony liv

உதயநிதியின் அடுத்தடுத்த படங்கள்

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க, பஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதே போல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்திலும் ஒரு பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

OTT-யில் இந்திய அளவில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயனின் ’டான்’… Netflix வெளியிட்ட லேட்டஸ்ட் update

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nenjukku needhi OTT streaming date announced by sony liv

People looking for online information on Nenjukku needhi, Nenjukku needhi OTT streaming Release update, Sony LIV, Udhayanidhi Stalin will find this news story useful.