'தடம்' வெற்றிக்காக இயக்குநருக்கு பரிசு கொடுத்து அசத்திய அருண் விஜய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தடையறத் தாக்க' படத்தின் வெற்றிக்கு பிறகு அருண் விஜய் - மகிழ் திருமேணி இணைந்த படம் 'தடம்' . திரில்லர் பாணியில் உருவான இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

Arun Vijay Gifted a watch to Magizh Thirumeni for Thadam Success

இந்த படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அருண் விஜய்யுடன் தான்யா ஹோப், வித்யா பிரதீப் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர்.  கோபிநாத் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் விதமாக பல்வேறு ஊர்களில் தடம்  வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு படக்குழு செல்ல திட்டமிட்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக இன்று கோயம்புத்தூரில் அருண் விஜய், மகிழ் திருமேணி உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் படம் பார்த்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் 'தடம்' வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் அருண் விஜய், இயக்குநர் மகிழ் திருமேணிக்கு வாட்ச் ஒன்றை பரிசளித்தார். பின்னர் இருவரும் ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.