துருவ் விக்ரமின் அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் பற்றிய சூப்பர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Dhruv Vikram's Adithya Varma tamil remake of Arjun Reddy completed sixty five percent of shoot

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் அமோக வெற்றிப்பெற்றதையடுத்து, இப்படத்தை ‘வர்மா’ என்ற தலைப்பில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க இயக்குநர் பாலா இயக்கியிருந்தார்.

இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் இறுதி பிரதி திருப்தி அளிக்காததால், அதனை கைவிடுவதாக தயாரிப்பாளர்கள் தரப்பு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இயக்குநர் சந்தீப் வாங்காவின் உதவியாளர் கிரீஸய்யா இயக்கத்தில் புதிய குழுவுடன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க ‘ஆதித்ய வர்மா’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகி வருகிறது.

ரவி.கே சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இப்படத்தின் ரீ-ஷூட் பணிகள் 65% நிறைவடைந்துள்ளதாகவும் தற்போது போர்ச்சுகலில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடிக்கிறார். இப்படத்தை ஜூன் மாதம் வெளியிட தயாரிப்புக் குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.