'பேட்ட'க்கு பிறகு சிம்ரன் - த்ரிஷா இணையும் படத்துக்கு டைட்டில் என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 22, 2019 11:53 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற படம் 'பேட்ட'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படத்தில் திரிஷா மற்றும் சிம்ரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே பிரசாந்த் நடிப்பில் வெளியான 'ஜோடி' படத்திலும் ஒன்றாக திரையில் தோன்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சுமந்த் ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சதிஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்துக்கு சுகர் (Sugar) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.