‘இந்த கெட்டப்-லயுமா? தல .. என்னா தல..?’ - ஜானுவாக மாறிய லொஸ்லியாவை கண் சிமிட்டாமல் ரசித்த கவின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘இந்த கெட்டப்-லயுமா? தல .. என்னா தல..?’ - ஜானுவாக மாறிய லொஸ்லியாவை கண் சிமிட்டாமல் ரசித்த கவின்

Bigg Boss Tamil 3-Highlights-Kavin,Ajith,Losliya,Trisha,Jaanu

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 36ம் நாளில் இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது.

'போடு ஆட்டம் போடு’ டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ்க்கு கோலிவுட்டின் பிரபல நடிகர், நடிகையர் கெட்டப் கொடுக்கப்படும். ஹாலில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் இசைக்கும் பாடலுக்கு நேரம் தாழ்த்தாமல் நிற்காமல் ஆட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதில் ரஜினியாக சேரன், கமல் ஹாசனாக தர்ஷன், கேப்டனாக சரவணன், தல அஜித்தாக கவின், தளபதி விஜய்யாக முகென், த்ரிஷாவாக லொஸ்லியா, தமன்னாவாக சாக்ஷி, சிம்புவாக சாண்டி என போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்கு கொடுத்த ரோலை ஏற்று பாடலுக்கு நடனமாடினர். அப்போது அஜித் வேடத்தில் இருந்த கவின், த்ரிஷாவாக இருந்த லொஸ்லியாவை வச்ச கண் வாங்காமல் சைட் அடித்துக் கொண்டிருந்தார். பிறகு இந்த கெட்டப்பில் இப்படி செய்யக் கூடாது, ஆனால் ஜான் இவ்வளவு அழகாக இருக்கும்போது எப்படி பார்க்காமல் இருக்க முடியும்?’ என வசனம் பேசிவிட்டு லொஸ்லியாவிடம் Flrit செய்தார்.

இதையடுத்து 'திருப்பாச்சி’ படத்தில் இடம்பெற்ற ‘கட்டு கட்டு..’ பாடலுக்கு ஜானு கெட்டப்பில் இருந்த லொஸ்லியா குத்தாட்டம் போட்டார். லொஸ்லியா நடனமாடி முடிக்கும் வரை அஜித் கெட்டப்பில் இருந்த கவின் கண் சிமிட்டாமல் லொஸ்லியாவை ரசித்தார்.