"சிங்கிள் தான் ஆனா..."- ரிலேஷன்ஷிப் பற்றி நடிகை த்ரிஷா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா திருமணம் குறித்த தனது கருத்தினை இன்ஸ்டாகிராம் பதிவில் தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

Trisha revealed about her opinion of marriage and relationship status

விஜய் சேதுபதியுடன் ‘96’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘பேட்ட’ ஆகிய சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்கி வரும் ‘ராங்கி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடிய த்ரிஷா, ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், தனது மேக்-அப், அழகின் ரகசியம் குறித்து பகிர்ந்துக் கொண்ட த்ரிஷா, திருமணம் பற்றிய ரசிகரின் கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலளித்துள்ளார்.

திருமணம் பற்றிய த்ரிஷாவின் ஒபினியன், ‘கல்யாணம் எப்போது உங்களுக்கு வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது செய்துக் கொள்ளுங்கள். கல்யாணம் செய்துக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பண்ணிக்காதீங்க..’ என கூறியுள்ளார். மேலும், ஒரு ரசிகர் நீங்கள் சிங்கிளா? கமிட்டடா? என கேட்டதற்கு, நடிகை த்ரிஷா, சிங்கிள் பட் டேக்கன் என கூறியுள்ளார்.

திரையுலகில் 16 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள த்ரிஷா, ‘சதுரங்க வேட்டை 2’, ‘பரமபத விளையாட்டு’, இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் படத்தில் சிம்ரனுடன் இணைந்து நடிக்கிறார்.

"சிங்கிள் தான் ஆனா..."- ரிலேஷன்ஷிப் பற்றி நடிகை த்ரிஷா! வீடியோ