இயக்குநர் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
`தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் தணிக்கைக்கு சென்ற இப்படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரியும் ஹீரோ விக்ராந்த் மற்றும் சுசீந்திரன், பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவத்தை சுற்றியே இப்படம் உருவாகியுள்ளது. வரலாறு காணாத திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை சுட்டுப் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கும் விசாரணை அதிகாரியாக மிஷ்கின் நடித்துள்ளார்.
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.
வரலாறு காணாத ராபரி - ஹீரோவை சுட்டுப் பிடிக்க உத்தரவு போட்ட மிஷ்கின் வீடியோ