www.garudabazaar.com

THUNIVU: 'சில்லா சில்லா' லிரிக் வீடியோ எடிட்டர் இவரா? போடு.. தீவிர அஜித் ரசிகர் போல!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

Thunivu Chilla Chilla Song Animation Editor Ambani Dfx

Also Read | Chilla Chilla: "நம்மளோட வேலைய பாத்து ஊர் பேசும் தானா".. துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

Thunivu Chilla Chilla Song Animation Editor Ambani Dfx

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

Thunivu Chilla Chilla Song Animation Editor Ambani Dfx

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Thunivu Chilla Chilla Song Animation Editor Ambani Dfx

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Thunivu Chilla Chilla Song Animation Editor Ambani Dfx

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில்லா சில்லா இன்று  மாலை 6:30 வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் லிரிக் வீடியோவை ADFX  ஸ்டூடியோவின் அம்பானி DFX வடிவமைத்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை அம்பானி DFX பதிவிட்டுள்ளார். அதில், "அஜித் சாருடன்...❤️❤️

இதுக்கு மேல வேற என்ன வேணும் வாழ்க்கையில்!

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.. மங்காத்தா படத்தின் டிக்கெட்டுக்கு ஒவ்வொரு தியேட்டராக அலைந்து திரிந்தது... தற்போது இது நடந்தேறியுள்ளது" என நடிகர் அஜித்குமாருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ட்வீட் செய்துள்ளார்.

 

Also Read | துணிவு சில்லா சில்லா பாட்டுல இதை கவனிச்சீங்களா?.. அஜித்துடன் நடனமாடிய பிரபல நடிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Chilla Chilla Song Animation Editor Ambani Dfx

People looking for online information on Ajith Kumar, Chilla Chilla Song, Thunivu, Thunivu Chilla Chilla Song will find this news story useful.