www.garudabazaar.com

துணிவு பட பணியில் மீண்டும் BIGG BOSS மமதி.. அவரே வெளியிட்ட ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

BIGGBOSS Mamathi Chari about Thunivu Dubbing

Also Read | நயன்தாரா & சத்யராஜ் நடிக்கும் 'CONNECT'.. அள்ளு விடும் அட்டகாசமான ஹாரர் டிரெய்லர்!

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

BIGGBOSS Mamathi Chari about Thunivu Dubbing

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

BIGGBOSS Mamathi Chari about Thunivu Dubbing

துணிவு படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நடிகர்கள் ஜி.எம். சுந்தர், ஜான் கொக்கன், மஞ்சு வாரியர், அமீர் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் ஏற்கனவே டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல டிவி தொகுப்பாளினியான மமதி சாரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துணிவு படத்தின் இரண்டு புதிய ஷாட்களுக்காக டப்பிங் பணிகளை மேற்கொண்டு வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். Four Frames Sound Company -யில் ஜெகன் மாதேஷ் & துணிவு படத்தின் உதவி இயக்குனரான அசோக் குமார் புருஷோத்தமனுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன் மமதி துணிவு படத்திற்காக டப்பிங் பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

BIGGBOSS Mamathi Chari about Thunivu Dubbing

மமதி சாரி, தமிழில் ஒளிபரப்பாகி இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.  தற்போது துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Also Read | 'கட்டா குஸ்தி' பிஸினஸ் மட்டும் இத்தனை கோடியா? விஷ்ணு விஷால் சொன்ன சூப்பர் தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

BIGGBOSS Mamathi Chari about Thunivu Dubbing

People looking for online information on Ajith Kumar, BIGGBOSS Mamathi Chari, Mamathi chari, Thunivu, Thunivu Dubbing will find this news story useful.