www.garudabazaar.com

Heavy Rain : கொட்டும் மழையிலும் குடையுடன் Walking கிளம்பிய குஷ்பு..! அவரே சொன்ன காரணம்.! VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் 85-90களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு .

Kushbu Latest Video while Morning Walking in Rain

Also Read | Chilla Chilla: "நம்மளோட வேலைய பாத்து ஊர் பேசும் தானா".. துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர். குஷ்பு நடித்த வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன், பிரம்மா, நடிகன், ரிக்‌ஷா மாமா, அண்ணாமலை உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் குஷ்பு நடித்துள்ளார்.

இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கோண்டவர். பின் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது அவனி நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

தமிழ் ரசிகர்களிடையே நல்ல பிரபலமான இவர் அரசியலிலும் குத்தித்தார். திமுக, காங்கிரஸில் இருந்த இவர் தற்போது பாஜகவில் உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வகித்தவர்.

Kushbu Latest Video while Morning Walking in Rain

கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்த படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோருடன் இணைந்து அங்கையற்கண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்தார்.

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மீரா சீரியலுக்கு முன்பு,  கோகுலத்தில் சீதை, சிவகாமி , நந்தினி, லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலிலும் குஷ்பு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குஷ்பு மழையில் குடை பிடித்து கொண்டு நடைப்பயிற்சி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த வீடியோவில், "எல்லாம் வரும் போகும். ஆனால் உடல் நலம் தான் தம்மை வாழ வைக்கும். சென்னையில் மழை, புயல் இருக்கு.  நடைப்பயிற்சியை போக வேண்டாம் என்று சொல்ல மழையை காரணமா சொல்லக் கூடாது. என்னால இப்போ இதை செய்ய முடியும்னா உஙகளாலும் முடியும்." என குஷ்பு வீடியோவில் கூறியுள்ளார்.

Also Read | Chilla Chilla: துணிவு படத்தின் புதிய போஸ்டர்.. செம்ம சூப்பர் COOL லுக்கில் அஜித்!

HEAVY RAIN : கொட்டும் மழையிலும் குடையுடன் WALKING கிளம்பிய குஷ்பு..! அவரே சொன்ன காரணம்.! VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kushbu Latest Video while Morning Walking in Rain

People looking for online information on Kushboo Sundar, Kushbu Latest Video, Rain will find this news story useful.