www.garudabazaar.com

Chilla Chilla: "நம்மளோட வேலைய பாத்து ஊர் பேசும் தானா".. துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் முதல் சிங்கிள் சில்லா சில்லா பாடல் வெளியாகி உள்ளது.

Thunivu Chilla Chilla First Single Song Released

Also Read | Chilla Chilla: துணிவு படத்தின் புதிய போஸ்டர்.. செம்ம சூப்பர் COOL லுக்கில் அஜித்!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

Thunivu Chilla Chilla First Single Song Released

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

Thunivu Chilla Chilla First Single Song Released

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Thunivu Chilla Chilla First Single Song Released

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில்லா சில்லா இன்று  மாலை 6:30 வெளியாகி உள்ளது.  இந்த பாடலை பாடலாசிரியர் வைசாக் எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையில் அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார்.

"வாய் உதார் வேணா

மாட்டிக்காத வீணா

நம்மளோட வேலைய பாத்து ஊர் பேசும் தானா" போன்ற வரிகளுடன் "உள்ளுக்குள்ள பயர்

தெறிச்சு ஓடும் பிஃயர்

பின்னாடி பேசுறவன் கிழிஞ்சு போன டயர்".. போன்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன.

"நம்மாண்டயே சீன் ஆ

டைம் வராது டா போனா

இஷ்டபட்டு கஷ்டபட்டா எல்லாம் வரும் தானா!" போன்ற வரிகளும் பாடலில் இடம் பெற்றுள்ளன.

 

 

Also Read | "மேலே போயிட்டே இருப்பீங்க.. கவலைப்படாதீங்க".. வைசாக்கிடம் நடிகர் அஜித் சொன்ன வாழ்த்து!

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Chilla Chilla First Single Song Released

People looking for online information on Ajith Kumar, Chilla Chilla Song, Thunivu, Thunivu Chilla Chilla First Single Song will find this news story useful.