Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

'துணிவு' பட பேங்காக் படப்பிடிப்பு.. BIGGBOSS அமீர் வெளியிட்ட வைரல் PHOTO! கூட இவங்க வேற இருக்காங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித்குமார் நடிக்கும் 61வது படமான 'துணிவு' படத்தின் பேங்காக் படப்பிடிப்பு தள புகைப்படம் வெளியாகி உள்ளது.

Thunivu BiggBoss Amir Shared Manju Warrier Picture in Instagram

Also Read | பிரபல 80ஸ் நடிகையுடன் செமயாக டான்ஸ் ஆடிய அதிதி ஷங்கர்.. வைரலாகும் சூப்பர் வீடியோ

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

Thunivu BiggBoss Amir Shared Manju Warrier Picture in Instagram

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு தற்போது துணிவு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத்,  சென்னை & விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

Thunivu BiggBoss Amir Shared Manju Warrier Picture in Instagram

இந்த படத்தின் தற்போதைய இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் துவங்கி உள்ளது. இதற்காக நடிகர் அஜித், மஞ்சு வாரியர் சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி வைரலாகியது நினைவுகூரத்தக்கது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.  இந்நிலையில் பேங்காக் நகரில் நடிகை மஞ்சு வாரியர் இளநீர் அருந்துவது போன்ற புகைப்படத்தை அமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Thunivu BiggBoss Amir Shared Manju Warrier Picture in Instagram

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Also Read | 'மாவீரன்' படத்தின் முக்கிய உரிமை.. மிகப்பெரிய விலைக்கு வாங்கிய முன்னணி நிறுவனம்! மாஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu BiggBoss Amir Shared Manju Warrier Picture in Instagram

People looking for online information on Ajith Kumar, Biggboss amir, Manju Warrier, Thunivu will find this news story useful.