Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

போடு வெடிய..அஜித் நடிக்கும் 'துணிவு'.. இந்தா வந்துருச்சுல அடுத்த தெறியான 2-வது லுக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் துணிவு படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Ajith Kumar AK Thunivu Movie Second Look Poster Released

Also Read | அஜித்தின் BLOCKBUSTER பட தலைப்பில் கதிர் & திவ்ய பாரதி.. ரொமான்ஸ் ததும்பும் FIRST LOOK POSTER!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

இந்த படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

Ajith Kumar AK Thunivu Movie Second Look Poster Released

இந்த படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கியது. சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தாக கூறப்படுகிறது. பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது.

Ajith Kumar AK Thunivu Movie Second Look Poster Released

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Ajith Kumar AK Thunivu Movie Second Look Poster Released

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது. துணிவு என்ற தலைப்புடன் No Guts No Glory என்ற வாசகத்துடன் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

போஸ்டரில் காதில் கடுக்கனுடன் நவநாகரீக தோற்றத்தில் நீண்ட தாடியுடன் வெண்ணிற ஆடையில் அஜித் காணப்படுகிறார்.

 

Also Read | இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு.. மாஸ் லுக்கில் களமிறங்கிய கமல்ஹாசன்! சூப்பர் BTS

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK Thunivu Movie Second Look Poster Released

People looking for online information on Ajith Kumar, AK 61 Movie, AK 61 Thunivu Movie, H Vinoth, Thunivu Movie Second Look Poster will find this news story useful.