Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

'மாவீரன்' படத்தின் முக்கிய உரிமை.. மிகப்பெரிய விலைக்கு வாங்கிய முன்னணி நிறுவனம்! மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் புதிய அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Sivakarthikeyan Maaveeran Audio Rights acquired by Saregama for records Price

Also Read | சர்தார் படத்தின் முதல் சிங்கிள் பாடல்.. கார்த்தி குரலில் பக்காவான குத்து பாடல்? செம அப்டேட்

பிரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக மாவீரன் படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைய உள்ளார். இவர் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு மாவீரன் என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது.

Sivakarthikeyan Maaveeran Audio Rights acquired by Saregama for records Price

இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த மாவீரன் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கியது.

Sivakarthikeyan Maaveeran Audio Rights acquired by Saregama for records Price

இந்த பூஜையில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்ற முக்கிய வேடத்தில் மிஷ்கின் & சரிதா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sivakarthikeyan Maaveeran Audio Rights acquired by Saregama for records Price

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விது ஐயனா பணிபுரிகிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். இவர்கள் ஏற்கனவே மண்டேலா படத்தில் பணிபுரிந்தவர்கள். இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை பிரபல சரிகம நிறுவனம் மிகப்பெரிய சாதனை விலைக்கு வாங்கியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | பிரபல 80ஸ் நடிகையுடன் செமயாக டான்ஸ் ஆடிய அதிதி ஷங்கர்.. வைரலாகும் சூப்பர் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Maaveeran Audio Rights acquired by Saregama for records Price

People looking for online information on Aditi Shankar, Maaveeran, Maaveeran Audio Rights, Saregama, Sivakarthikeyan will find this news story useful.