Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

ராம் இயக்கத்தில் நிவின் பாலி.. படத்தின் பெயர் பற்றி வெளியான அட்டகாசமான தகவல்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி நடித்துள்ள திரைப்படத்தின் பெயர் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அசத்தலான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

director ram and nivin pauly new movie name sources

Also Read | "பெண் குழந்தை பிறந்து ஒரு வாரமாச்சு".. மகளுடன் இருக்கும் Photo போட்டு நெகிழ்ந்த KPY நவீன்!!

'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' ஆகிய உணர்வுப்பூர்வமான படங்களைக் இயக்கியவர் இயக்குநர் ராம். அவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர் பேசும் விஷயம், மக்கள் மத்தியில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி செல்லும்.

பேரன்பு படத்தை தொடர்ந்து, நடிகர் நிவின் பாலியை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் ராம்.

director ram and nivin pauly new movie name sources

மாநாடு உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்த படத்தையும் தயாரித்து வருகிறார். நிவின் பாலியுடன் நடிகர் சூரி, நடிகை அஞ்சலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடியில் தொடங்கியது.

director ram and nivin pauly new movie name sources

அடுத்தடுத்து கேரளா, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும், ராம் - நிவின் பாலி படத்தின் படப்பிடிப்புத் தள புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்ததாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்துப் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டிருந்தது.

director ram and nivin pauly new movie name sources

இந்நிலையில், ராம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் பெயர் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

director ram and nivin pauly new movie name sources

அதன்படி, ராம் மற்றும் நிவின் பாலி இணைந்துள்ள திரைப்படத்திற்கு "ஏழு மலை ஏழு கடல்" என பெயரிடப்பட்டுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் அக்டோபர் 11, 2022 அன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | போண்டா மணியிடமே 1 லட்ச ரூபாய் திருட்டு.. கூடவே இருந்து நபர் பாத்த பயங்கர வேலை!!

தொடர்புடைய இணைப்புகள்

director ram and nivin pauly new movie name sources

People looking for online information on Nivin Pauly, Nivin Pauly new movie, Ram will find this news story useful.