www.garudabazaar.com

துணிவு படத்தில் நடிகர் அஜித் ஸ்டைலிஷ்ட் இவரா? விஜய் & தனுஷ் கூட மட்டும் இத்தனை படமா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தின் ஸ்டைலிஸ்ட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Thunivu Ajith Kumar Stylist Dev Worked with Vijay and Dhanush

Also Read | கோபியின் சூழ்ச்சிக்கு ஆளான இனியா.. பாக்கியலட்சுமி சீரியலில் நடந்தேறும் அடுத்த பரபரப்பு!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு  'துணிவு' என பெயரிடப்பட்டது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

Thunivu Ajith Kumar Stylist Dev Worked with Vijay and Dhanush

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித் குமார், புதிய லுக்கில் இருக்கும்  துணிவு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது. கிளீன் ஷேவ் செய்து நவநாகரீக தோற்றத்தில் அஜித் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படங்களை ஸ்டைலிஸ்ட் தேவ் சக்திவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "துணிவு படத்தில் அஜித் சாருக்கு ஸ்டைல் ​​செய்ததற்காக உலகிலேயே முதல் இடத்தில் இருப்பது போல உணர்கிறேன். வாய்ப்பளித்த அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

Thunivu Ajith Kumar Stylist Dev Worked with Vijay and Dhanush

துணிவு படத்திற்காக ஸ்டைலான வெள்ளைத் தாடியுடன் லுக்கை உருவாக்குவது முதல் இன்று அஜித் சாரின் க்ளீன் ஷேவ் லுக் வரை, இது எனக்கு மகிழ்ச்சிகரமான மற்றும் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

இன்றுடன் துணிவு படப்பிடிப்பு நிறைவடைந்தது‌. ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள் மற்றும் ஒவ்வொரு ரசிகரையும் போல் வெள்ளித்திரையில் துணிவு படத்தினை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என தேவ் பதிவிட்டுள்ளார்.

தேவ் சக்திவேல் ஏற்கனவே மெர்சல், பிகில், பீஸ்ட், ஜகமே தந்திரம், அசுரன், மாறன் ஆகிய படங்களில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "ரவுடியா நீ".. "ரவுடித்தனம் பண்ணிட்டு இருக்க நீ".. அசீமிடம் கோபப்பட்ட அமுதவாணன் & விக்ரமன்!

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Ajith Kumar Stylist Dev Worked with Vijay and Dhanush

People looking for online information on Ajith Kumar, Dev, Dhanush, Stylist Dev, Thunivu, Vijay will find this news story useful.