www.garudabazaar.com

துணிவு படத்தின் மூன்றாவது போஸ்டர்.. வைரலாகும் அஜித்தின் ஸ்டைலான தெறி லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் புதிய போஸ்டர் திரையரங்குகளில் பிரத்யேகமாக வெளியாகி உள்ளது.

Thunivu Ajith Kumar AK Third Poster went viral

Also Read | "உன்னுடன் வாழ்வதற்கு".. மகாலட்சுமியுடன் இருக்கும் PHOTO-வை பகிர்ந்து ரவீந்தர் உருக்கமான பதிவு!

நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது.

வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thunivu Ajith Kumar AK Third Poster went viral

வலிமை படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். பிக்பாஸ் பவனி அமீர் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

Thunivu Ajith Kumar AK Third Poster went viral

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Thunivu Ajith Kumar AK Third Poster went viral

துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

துணிவு படத்தின் அமெரிக்க தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல சரிகம சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

Thunivu Ajith Kumar AK Third Poster went viral

இந்நிலையில் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் துணிவு படத்தின் புதிய போஸ்டரை திரையரங்க பேனர் வடிவில் வெளியிட்டுள்ளார்.  இந்த போஸ்டரில் பொங்கல் ரிலீஸ் என்ற வாசகத்துடன் No Guts No Glory என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. வெண்ணிற ஆடையில் கூலிங் கிளாஸ் அணிந்து காலரை தூக்கி விட்டபடியே அஜித்தின் லுக் அமைந்துள்ளது. காதில் கடுக்கனுடன் முகத்தில் நீண்ட தாடியுடன் இருக்கும் அஜித்தின் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Also Read | ‘வதந்தி’ வெப் சீரிஸ்.. உலகமெங்கும் உள்ள 100 இசைக் கலைஞர்கள், பாடகர்கள் கொண்டு இசை.!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Ajith Kumar AK Third Poster went viral

People looking for online information on Ajith Kumar, AK 61 Movie, H Vinoth, Thunivu Ajith Kumar Third Poster, Thunivu Movie will find this news story useful.