www.garudabazaar.com

கௌதம் & மஞ்சிமா திருமணம்.. GIFT அனுப்பி வாழ்த்திய நயன் & விக்கி! என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

Nayanthara Vignesh Shivan Wishes to Gautham Karthik Manjima Mohan

கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

Nayanthara Vignesh Shivan Wishes to Gautham Karthik Manjima Mohan

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்

சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

நேற்று முன்தினம் சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது.  நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்றன.

Nayanthara Vignesh Shivan Wishes to Gautham Karthik Manjima Mohan

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் & நயன்தாரா இணைந்து மணமக்கள் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகனுக்கு வாழ்த்து கூறியுள்ளனர். மேலும் கேக் ஒன்றை பரிசளித்துள்ளனர். அந்த வாழ்த்து செய்தியில், "வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருக்க வாழ்த்துகள்" என கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Vignesh Shivan Wishes to Gautham Karthik Manjima Mohan

People looking for online information on Gautham Karthik, Manjima Mohan, Nayanthara, Vignesh shivan will find this news story useful.