Pattamboochi

தெறிக்கும் அனிருத் இசையில் தாய் கிழவி.. திருச்சிற்றம்பலம் படத்தின் தாறுமாறான 1st சிங்கிள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின்  முதல் சிங்கிள் பாடல் தாய் கிழவி வெளியாகி உள்ளது.

Thiruchitrambalam Movie Dhanush Anirudh First Single Song Released

Also Read | இந்தி சினிமாவின் KGF.. ரன்பீர் கபூர் - சஞ்சய் தத் நடிக்கும் ஷம்ஷேரா.. வெளியான GOOSEBUMPS டிரெய்லர்!

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், "திருச்சிற்றம்பலம்" படத்தில் நடித்துள்ளார்.

திருச்சிற்றம்பலம் படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

Thiruchitrambalam Movie Dhanush Anirudh First Single Song Released

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது.

இப்படத்திற்கு ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார்.

Thiruchitrambalam Movie Dhanush Anirudh First Single Song Released

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.  இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் சிங்கிள் பாடல்  இன்று (24.06.2022) மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ளது.

அனிருத் ரவிச்சந்திரன் இசையில் நடன இயக்குனர் சதீஷ் நடன இயக்கத்தில் இந்த பாடல்  உருவாகியுள்ளது.  இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். முறைப்பெண்ணான பிரியா பவானி சங்கர் பாத்திரமும், தோழி நித்யா மேனன் பாத்திரமும் பாடலில் தோன்றியுள்ளனர்.  பாரதிராஜா & பிரகாஷ் ராஜூம் இவ்வீடியோவில் தோன்றியுள்ளனர்.

Thiruchitrambalam Movie Dhanush Anirudh First Single Song Released

தங்க மகன் படத்திற்கு பிறகு 7 வருடங்கள் கழித்து அனிருத் - தனுஷ் கூட்டணியில் இந்த முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.

Also Read | பாடகர் பாட்ஷாவுடன் இணைந்து மாளவிகா மோகனனின் அசத்தல் நடனம்.. வெளியான முதல் வைரல் இசை வீடியோ!

தெறிக்கும் அனிருத் இசையில் தாய் கிழவி.. திருச்சிற்றம்பலம் படத்தின் தாறுமாறான 1ST சிங்கிள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thiruchitrambalam Movie Dhanush Anirudh First Single Song Released

People looking for online information on Anirudh, Dhanush, Thiruchitrambalam First Single Song, Thiruchitrambalam Movie will find this news story useful.