தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம்.. ரிலீஸ் எப்போ? புது போஸ்டருடன் வெளியான மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியாகி உள்ளது.

Dhanush Thiruchitrambalam Movie Release Date Officially Announced

Also Read | “VTK ஆடியோ ரிலீஸ தள்ளிவச்சிட்டு, எனக்காக… “ சிம்பு பத்தி பேசும்போது Emotional ஆன TR

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது. பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பை படக்குழு நடத்தினர்.

Dhanush Thiruchitrambalam Movie Release Date Officially Announced

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார்.

திருச்சிற்றம்பலம் படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த ரிலீஸ் தேதியை புதிய போஸ்டருடன் தனுஷ் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

Dhanush Thiruchitrambalam Movie Release Date Officially Announced

கடைசியாக தனுஷ் நடிப்பில் கர்ணன் படம், கடந்த 2021 ஏப்ரலில் ரிலீசானது. அடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஒடிடியில் வெளியாகின.

இந்த திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து 'நானே வருவேன்' படத்திலும், தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் வாத்தி, (தெலுங்கில் Sir) எனப் பெயரிடப்பட்ட படத்தில் தனுஷ் நடித்து வருகிறார், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது

Also Read | AK 61 ஷூட்டிங்.. ஹோட்டல் ஊழியர்களுக்கு கேக் ஊட்டி விட்ட அஜித்! நெகிழ்ந்து போன நிர்வாகம்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Thiruchitrambalam Movie Release Date Officially Announced

People looking for online information on Dhanush, Dhanush Thiruchitrambalam Movie, Thiruchitrambalam Movie, Thiruchitrambalam Movie Release updates will find this news story useful.