Veetla Vishesham Others Page USA

ரஜினிகாந்த் - நெல்சன் - அனிருத் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் எப்போ? தெறியான EXCLUSIVE அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : ரஜினிகாந்த் - நெல்சன் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகி உள்ளது.

Anirudh Rajinikanth Nelson Jailer Movie Shooting Update From Director

Also Read | K.T.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன்-2 .. படத்தில் இணைந்த பிரபல முன்னணி ஒளிப்பதிவாளர்!

Thalaivar 169

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த 169 வது படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்தது. இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதில், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, கலை இயக்குனர் கிரண், உடையலங்காரம் - பல்லவி ஆகியோர் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Anirudh Rajinikanth Nelson Jailer Movie Shooting Update From Director

Title Look

இப்படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாகி உள்ளது. டைட்டில் ரத்தம் தோய்ந்த கத்தி பெரிய சங்கிலியால் கட்டப்பட்டு போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. வெளிர் மஞ்சள் நிறத்தில் டைட்டில் அமைந்துள்ளது.

Exclusive Shooting Update

8 ஆவது Behindwoods Gold Medals Award, கடந்த மாதம் மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது மேடையில் கால் பதித்திருந்தனர்.

வெற்றிமாறன், செல்வராகவன், விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, வெங்கட் பிரபு, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் விருதுகளை வென்றும் அசத்தி இருந்தனர்.

Anirudh Rajinikanth Nelson Jailer Movie Shooting Update From Director

டாக்டர் படத்திற்காக நெல்சனுக்கு தங்க பதக்கம் கொடுக்கப்பட்டது. பின்னர் தொகுப்பாளர்கள் கேட்ட கேள்விக்கும் நெல்சன் பதில் அளித்தார். அப்போது ரஜினி காந்த் - நெல்சன் இணையும் புதிய படத்தின் அப்டேட் குறித்த கேள்விக்கு, அந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கும் என்று நெல்சன் Exclusive அப்டேட் கொடுத்தார்.

இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

Also Read | தனுஷ் நடிக்கும் வாத்தி.. படத்துக்காக களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ்! வெளியான செம மாஸ் புகைப்படம்

ரஜினிகாந்த் - நெல்சன் - அனிருத் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் எப்போ? தெறியான EXCLUSIVE அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh Rajinikanth Nelson Jailer Movie Shooting Update From Director

People looking for online information on Anirudh, Jailer Movie, Jailer Movie Shooting Update, Nelson Dilipkumar, Rajinikanth will find this news story useful.