Veetla Vishesham Others Page USA

“லோகேஷ்க்கு கார்…. சூர்யாவுக்கு ரோலக்ஸ்… உங்களுக்கு என்ன Gift..?” அனிருத் சொன்ன செம்ம பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் லோகேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கேரளாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

Anirudh answered about kamal gift to him

Also Read | மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிட்டான ‘SVP’… பிரபல ஓடிடியில்… ரிலீஸ் தேதி Update

விக்ரம் ரிலீஸ்…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

வசூல் மழை…

உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் விக்ரம் இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறத். கமலின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படங்களின் பட்டியலில் விக்ரம் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கமல் விக்ரம் படத்தின் வசூல் பற்றி பேசும் போது சூசகமாக 300 கோடி ரூபாய் என பேசியது குறிப்பிடத்தக்கது.

Anirudh answered about kamal gift to him

கமல் அளித்த பரிசுகள்…

விக்ரம் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியடைந்துள்ள தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு விலையுயர்ந்த 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்தார். அதுபோல லோகேஷின் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு . TVS apache ரக மோட்டார் பைக்குகளையும் பரிசாக அளித்தார். அதுபோல விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கலக்கிய சூர்யாவுக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

Anirudh answered about kamal gift to him

எனக்கு கமல் சார் கொடுத்த கிஃப்ட்…

இதே போல படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒருவராக அமைந்த இசையமைப்பாளர் அனிருத்துக்கு என்ன பரிசு கமல் கொடுப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. சமீபத்தில் படத்தின் வெற்றியைக் கொண்டாட, இயக்குனர் லோகேஷ் மற்றும் அனிருத் கேரளாவுக்கு சென்றிருந்தனர். அப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் “கமல் சார் லோகேஷுக்கு கார் பரிசாக கொடுத்தார், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசாக கொடுத்தார். அனிருத்துக்கு என்ன கொடுத்தார்?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அனிருத் “எனக்கு விக்ரம் படம் கொடுத்ததே கிஃப்ட்தான்” என பதிலாகக் கூற அனைவரும் கைதட்டி அவரின் பதிலை ரசித்தனர். மேலும் பேசிய அனிருத் விரைவில் மலையாளப் படத்துக்கு இசையமைப்பேன் எனவும் கூறினார்.

Also Read | “சார் ஒரு Photo…”… Geniune ஆக மறுத்த அஜித்… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh answered about kamal gift to him

People looking for online information on Anirudh, Anirudh answered about kamal gift, Anirudh Ravichander, Kamal Haasan, Vikram Movie will find this news story useful.