சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதியின் 'சைரா' படத்திலிருந்து ஓ சைரா வீடியோ பாடல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 29, 2019 09:58 PM
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், தமன்னா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. இந்த படத்தை கொனிடேலா புரொடக்ஷன் சார்பாக நடிகர் ராம் சரண் தயாரித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். இந்த படத்தை அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். ரத்னவேலு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஓ சைரா என்ற வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில் நயன்தாரா, தமன்னா இணைந்து தோன்றுகின்றனர். இந்த படத்தை தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதியின் 'சைரா' படத்திலிருந்து ஓ சைரா வீடியோ பாடல் வீடியோ
Tags : Sye Raa, Vijay Sethupathi, Nayanthara, Chiranjeevi