“‘தேவர்மகன் 2’ கதை ரெடி..” - கமல்ஹாசனை இயக்க காத்திருக்கும் பிக் பாஸ் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருப்பதாக கூறப்படும் ‘தேவர்மகன் 2’ படத்திற்கு தன்னிடம் கதை தயாராக இருப்பதாக பிக் பாஸ் பிரபலமான இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

Bigg Boss Cheran to direct Kamal Haasan Thevarmagan 2?

சென்னை வடபழனி கமலா திரையரங்கில் ‘welcome back’  சேரன் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இயக்குநர் சேரனுக்கு திரையரங்கம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த சேரன், "திரைப்படம் பார்க்க வந்த எனக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. பிக் பாஸ்-ல் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இதன் மூலம் நான் இயக்குநர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதன் என்பதை மக்களுக்கு புரிய வைத்துவிட்டேன்” என்றார்.

மேலும், "பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் செல்வதற்கு முக்கிய காரணம் விஜய் சேதுபதி. அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டியிருந்தது, அப்போது தான் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இதனை கேள்விபட்ட அவர், பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றால் இந்த தலைமுறையினருடன் ஒரு நெருக்கம் உண்டாகும் என கூறினார். அவர் ஆலோசனையின் படி தான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சில் பங்கு பெற்றேன்” எனவும் கூறினார்.

இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முறை கமல்ஹாசன் சாரை வைத்து ‘தேவர்மகன் 2’ எடுக்க விருப்பம் என்றும், அதற்கான கதை தன்னிடம் இருப்பதாகவும் கூறினேன். ஆனால், இது தொடர்பாக எவ்வித பேச்சு வார்த்தையும் தொடங்கவில்லை. கமல் சார் கதை கேட்க தயாராக இருந்தால், எனக்கு வாய்ப்பளித்தால் ‘தேவர்மகன் 2’ படம் தொடங்கும் வாய்ப்புள்ளது” என இயக்குநர் சேரன் தெரிவித்தார்.

தற்போது நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, ஏ.ஆர்.ரகுமான் இசையில், லைகா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ திரைப்படத்தை தொடங்கவும் கமல்ஹாசன் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.