Pattamboochi

இந்திய நடிகைகளில் முதல்முறையாக உலகின் TOP நகை BRAND தூதுவரான தீபிகா படுகோனே! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய நடிகைகளில் முதல்முறையாக உலகின் டாப் நகை பிராண்ட்டிற்கு தூதுவரான தீபிகா படுகோனே நியமிக்கப்பட்டுள்ளர்.

The new ambassador of Cartier Deepika Padukone from Cartier’s event in madrid

Also Read | போலீசாக KGF வில்லன் சஞ்சய் தத்.. திருடனாக ரன்பீர் கபூர்.. வெளியான மிரட்டல் டீஸர்! எப்படி இருக்கு?

ஐஸ்வர்யா என்ற கன்னடப் படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய தீபிகா படுகோன், 2007 இல் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் இந்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

பின்னர், சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா மற்றும் மறைந்த இர்ஃபான் கான் மற்றும் அமிதாப் பச்சனுடன் பிகு, ரன்பீர் கபூருடன் YJHD, தமாஸா ஆகிய படங்களின் மூலம் இந்தி சினிமாவில் உச்ச நிலையை அடைந்தார். ஹாலிவுட் படமான XXX: Return of Xander Cage படத்திலும் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

The new ambassador of Cartier Deepika Padukone from Cartier’s event in madrid

தீபிகா படுகோன் கடைசியாக ஷகுன் பத்ராவின்  கெஹ்ரையானில் நடித்தார், அதற்கு முன், கபீர் கானின் 83, படத்தில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்தார். தற்போது ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் படத்தையும், ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் பதான் படத்திலும் நடித்துள்ளார். பதான் படம் ஜனவரி 2023 இல் ரிலீசாக உள்ளது.

The new ambassador of Cartier Deepika Padukone from Cartier’s event in madrid

இந்நிலையில் தற்போது, ​​தீபிகா படுகோனே கார்டியர் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். கார்டியர் நிறுவன கண்காட்சி நிகழ்விற்காக ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் இருக்கிறார், மேலும் இதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. தீபிகா படுகோன் ஏற்கனவே கேன்ஸ் படவிழாவில் கார்டியர் நகைகளை அணிந்து வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

The new ambassador of Cartier Deepika Padukone from Cartier’s event in madrid

Also Read | அனிருத் இசையில் தனுஷ் எழுதிய "தாய்க் கிழவி".. திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் சிங்கிள் UPDATE!

தொடர்புடைய இணைப்புகள்

The new ambassador of Cartier Deepika Padukone from Cartier’s event in madrid

People looking for online information on Ambassador of Cartier, Cartier Event, Cartier Event in madrid, Deepika Padukone, Deepika Padukone in Cartier Event will find this news story useful.