Pattamboochi

“JD ரிலீஸாகி அமைதியா வாழ்ந்தா…” ‘வாரிசு’ போஸ்டருக்கு சூப்பர் கேப்ஷன் கொடுத்த இயக்குனர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் போஸ்டரை வைத்து இயக்குனர் ரத்னகுமார் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Director Rathnakumar caption for varisu second look

Also Read | விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன உதயநிதி… அதுலயும் அந்த வார்த்ததான் ஹைலைட்

இன்று நடிகர் விஜய் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு வாரிசு படக்குழு நேற்று முதல் லுக் போஸ்டரை வெளியிட்டது. அதையடுத்து இன்று மேலும் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. இந்த போஸ்டர்களில் விஜய் வசிகரமாகவும், ஸ்டைலாகவும் இருப்பதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

வாரிசு படப்பிடிப்பு…

வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத், சென்னை ஆகிய இடங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது.  இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் பணியாற்ற உள்ளார்.  இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து சரத்குமார் நடிக்கிறார். நடிகர் பிரபு, ஷ்யாம், ஜெய சுதா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு , நடிகை சங்கீதா, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Director Rathnakumar caption for varisu second look

இன்று காலை முதல் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விஜய் பிறந்தநாள் மற்றும் வாரிசு பட அப்டேட்களாக குவிந்துள்ளன. இந்நிலையில் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனரும் மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் வசனங்கள் எழுதியவருமான இயக்குனர் ரத்னகுமாரின் Tweet ஒன்று ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Director Rathnakumar caption for varisu second look

மாஸ்டர் meets வாரிசு…

வாரிசு படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் விஜய் ஜாலியாக குழந்தைகளோடு மாட்டு வண்டியில் பயணம் செய்வது போல உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த போஸ்டரையும் மாஸ்டர் படத்தில் இதே போல இருக்கும் ஒரு போஸ்டரையும் பகிர்ந்துள்ள ரத்னகுமார் “மாஸ்டர் JD ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகி டி டோட்டலர் ஆகி அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தால்” எனக் கூறி பகிர அது இப்போது வைரலாகி வருகிறது.

Also Read | “ஷங்கர் சாரோடு அற்புதமான பயணம்…” ‘RC 15’ படத்தின் Exciting அப்டேட் கொடுத்த தமன்

Director Rathnakumar caption for varisu second look

People looking for online information on Director Rathnakumar, Thalapathy 66 Movie, Vijay Varisu Movie will find this news story useful.