Pattamboochi

“ஷங்கர் சாரோடு அற்புதமான பயணம்…” ‘RC 15’ படத்தின் Exciting அப்டேட் கொடுத்த தமன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கர் இயக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக தமன் பணியாற்றுகிறார்.

Thaman shared RC 15 composing pic with director Shankar

Also Read | இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான பாடகி சின்மயி… ரசிகர்கள் வாழ்த்து…viral pics

டோலிவுட்டில் ஷங்கர்…

தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர், தற்போது தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பணியாற்ற அடுத்தடுத்து ஒப்பந்தமாகி உள்ளார்.  ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தை அடுத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கலைஞர்கள்…

RC 15 படத்தின் கதாநாயகியாக நடிகை  கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதல்முறையாக ஷங்கர் படத்துக்கு அவரால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட தமன் இசையமைக்கிறார். இந்த படத்துக்குப் பின்னர் அவர் ரண்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார்.

Thaman shared RC 15 composing pic with director Shankar

படப்பிடிப்பு…

இந்த படத்தின் துவக்க விழா செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்று வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது.

Thaman shared RC 15 composing pic with director Shankar

தமன் கொடுத்த அப்டேட்…

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் இயக்குனர் ஷங்கரோடு RC 15 படத்தின் பாடல் கம்போஸிங்கில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதோடு “என்ன ஒரு அற்புதமான பயணம் இயக்குனர் ஷங்கர் சாரோடு. #RC15compositions” என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் ஷங்கரால் பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தப் பட்டவர் தமன். அதன் பின்னர் இசையமைப்பாளராக ஆன அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தற்போது பிரபல இசையமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன உதயநிதி… அதுலயும் அந்த வார்த்ததான் ஹைலைட்

தொடர்புடைய இணைப்புகள்

Thaman shared RC 15 composing pic with director Shankar

People looking for online information on Director shankar, RC 15, Thaman will find this news story useful.