பிக்பாஸ் இரண்டாவது பைனலிஸ்ட் இவர் தான்.! ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 29, 2019 04:15 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 98 நாட்களை எட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படவுள்ள நிலையில் நேற்று சாண்டி காப்பாற்றப்பட்டு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். தற்போது முகின், சாண்டி என இருவரும் இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர்.
இதனையடுத்து லாஸ்லியா, ஷெரின், தர்ஷன் ஆகிய மூவரில் ஒருவர் இன்று வெளியேற்றப்பட்டுவிட்டு, மீதியிருக்கும் இருவர் அடுத்த வாரம் இறுதிப்போட்டிக்கு செல்லுவர்.
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் ‘நான் தான் இன்று வெளியேறுவேன் என எதிர்பார்க்கின்றேன்’ என்று கமலிடம் ஷெரின் கூற, உடனே ஷெரினுக்கு கமல் ஒரு முக்கிய வேலை கொடுக்கின்றார். அந்த வேலை என்னவாக இருக்கும் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த நிலையில் இன்றைய எவிக்சன் பட்டியலில் இருந்து ஷெரின், லாஸ்லியா ஆகிய இருவரும் காப்பாற்றப்படுவதாகவும், தர்ஷன் வெளியேறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், இன்று ஒருவர் வெளியேறுவது உறுதி. காப்பாற்ற படுபவர் பெயரை முதலில் சொல்லவா... அல்லது, வெளியேறுபவர் பெயரை முதலில் கூறவா என தனக்கு தானே பேசி கொள்ளும் கமல், சுவாரஸ்யம் கருதி முதலில் காப்பாற்ற படுபவர் பெயரை கூறுவதாக தெரிவிக்கிறார்
பிக்பாஸ் இரண்டாவது பைனலிஸ்ட் இவர் தான்.! ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ