விஜய்யிடம் இருந்து வந்த ஃபோன்.. அரவிந்த் சாமி வேடத்தில் அஜித் - மோகன் ராஜா Exclusive.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விஜய்யிடம் இருந்து வந்த ஃபோன் கால் குறித்து இயக்குநர் மோகன்ராஜா தன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மோகன் ராஜா. ஜெயம், எம்.குமரன், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட படங்களை இவர் தன் தம்பி ஜெயம் ரவியை வைத்து இயக்கினார். இவர்களின் கூட்டணியில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில் அவர் பிஹைன்ட்வுட்ஸ் தளத்திற்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் விஜய் குறித்து ஒரு நினைவு சம்பவத்தை பகிர்ந்தார். தனி ஒருவன் வெளியாகி முதல் ஷோ முடிந்த பிறகு விஜய் கால் செய்தார். ''என்ன சந்தோஷமா இருக்கீங்களா.. நிறைய நல்ல விஷயங்கள் கேள்விபடுறேன். தூள் கிளப்புங்க'' என பாராட்டினார் என்ற தன் நினைவை பகிர்ந்து கொண்டார். மேலும் தனி ஒருவன் படம் குறித்தும், அரவிந்த்சாமி வேடத்தில் அஜித்தை நடிக்க வைப்பது பற்றி டிஸ்கஷன் செய்தது உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
விஜய்யிடம் இருந்து வந்த ஃபோன்.. அரவிந்த் சாமி வேடத்தில் அஜித் - மோகன் ராஜா EXCLUSIVE. வீடியோ