கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, நம்ம வீட்டு கல்யாணம் மற்றும் கேடி பாய்ஸ் கில்லாடி பெண்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி பிரபலமானவர் ரம்யா சுப்ரமணியன்.

பன்முக ஆளுமை கொண்ட ரம்யா அதன் பின் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2004-ஆண்டில் நடந்த மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பவர் லிஃப்டிங் போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார் ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது,
ரம்யா சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். கொரோனா பிரச்னையால் அனைவரும் சோர்ந்திருக்க, இன்ஸ்டாகிராமில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் விடியோக்களை பதிவிடுவதன் மூலம் ரசிகர்களிடம் நேரடித் தொடர்பில் உள்ளார்.
சமீபத்தில் அவரது செல்ல நாய் மிலோ இறந்துவிட்டது. அது குறித்து ஒரு சோகமான பதிவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். தற்போது இன்னொரு பதிவில் மிலோவைப் பிரிந்த மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட என்ன முடிவு எடுத்துள்ளார் என்பதை வீடியோவாக எடுத்து பகிர்ந்தார். நேற்று (ஏப்ரல் 6), ரம்யா தனது அடுத்தப் படமான மாஸ்டர் பாடலை ஒலிக்கவிட்டு, அதற்கேற்றபடி கையில் ஒரு துடைப்பத்துடன் தரையை பெறுக்கியபடி டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ரம்யா.
அதில் அவர் கூறியது, ‘சமீபத்தில் நான் இந்த குவாரன்டைன் லைஃப் பற்றி அதிகம் யோசிக்கிறேன், யதார்த்தத்தை உள்ளபடி ஏற்று, புலம்புவதை கவனத்துடன் நிறுத்தப் போகிறேன். ஒரு நல்ல இடத்தில் இருப்பதற்கு நன்றி உடையவளாக இருக்கும் அதே சமயத்தில், சின்ன சின்ன விஷயங்களில் சந்தோஷம் அடைவதற்கு இனி கவனம் செலுத்துவேன்.
எனக்காக இந்த வீடியோவைப் பதிவு செய்தபோது, என் அம்மாவின் முகத்தில் தெரிந்த அந்த அழகான புன்னகைக்காக, இதை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்! (பின் குறிப்பு - இதனால் இந்த நாளின் கார்டியோ வொர்க் அவுட்டும் முடிந்தது).