www.garudabazaar.com

அனிருத் உடன் தமன்.. வைரல் PHOTO-வோட தமன் போட்ட அந்த 2 ஹேஸ்டேக்ஸ் தான் இப்போ டிரெண்டிங்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2003 ம் ஆண்டு வெளியான “பாய்ஸ்” படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமானவர் தமன் S.

Thaman with Anirudh Latest Photo went Viral

Also Read | தனது மகனுடன் சுஹாசினி மணிரத்னம்.. லண்டனில் இருந்து வெளியிட்ட லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்!  

பின்னர் தெலுங்கு பட உலகின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார். தெலுங்கின் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து தற்போது தனக்கென தனித்த ரசிகர் பட்டாளத்தையும், பல படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜூன் படங்களுக்கு இசையமைத்த தமன் தமிழிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Thaman with Anirudh Latest Photo went Viral

சமீபத்தில் டெல்லியில் நடந்த 68வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் இசையமைப்பாளர் தமனுக்கு ஆல வைகுண்ட புரமுலு படத்தின் பாடல்களுக்காக மத்திய அரசு சார்பில் தகவல் & ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் தேசிய விருதை வென்றார். தற்போது தமிழில் விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Thaman with Anirudh Latest Photo went Viral

இச்சூழலில் இசையமைப்பாளர் தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த டிவீட்டில் #SSMB28 & #NTR30 என ஹேஸ்டேக்கை பதிவிட்டுள்ளார்.

மகேஷ் பாபு நடிப்பில் திரி விக்ரம் இயக்கும் #SSMB28 படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். அதே போல் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கும் #NTR30 படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Thaman with Anirudh Latest Photo went Viral

மேலும் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் தமன் இசையில் ஒரு பாடலை அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Also Read | ரிலீசான லத்தி.. பால் அபிஷேகம், குதிரை பல்லக்கு என அமர்க்களம் செய்த விஷால் ரசிகர்கள்! VIDEO

தொடர்புடைய இணைப்புகள்

Thaman with Anirudh Latest Photo went Viral

People looking for online information on Anirudh, Anirudh Latest Photo, Anirudh Ravichander, S Thaman will find this news story useful.