www.garudabazaar.com

போடு தகிட தகிட.. மலையாள சினிமாவில் அறிமுகமாகும் அனிருத்.. ஹீரோ ஹீரோயின் இவங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் அனிருத், மலையாள திரைப்படம் ஒன்றில் பணியாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Anirudh debuting in to malayalam industry Directed by Haneef Adeni

Also Read | வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்.. சோகத்தில் இசை ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான '3' திரைப்படத்தின் மூலம், இசையமைப்பாளராக கால் பதித்தார் அனிருத். அதைத் தொடர்ந்து, முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் படங்களிலும் அனிருத் பணியாற்றியிருக்கிறார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள அனிருத் முதன் முறையாக மலையாள படம் ஒன்றில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Anirudh debuting in to malayalam industry Directed by Haneef Adeni

மலையாளத்தின் பிரபல இயக்குனரான ஹனீப் அடேனியின் படத்தில் அனிருத் இணைய இருப்பதாக தெரிகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'தி கிரேட் ஃபாதர்' திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனார் ஹனீப் அடேனி. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, 'ஆபிரகாமின்டே சந்ததிகள்', 'மைக்கேல்' ஆகிய படங்களை இயக்கி ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் ஹனீப்.

இந்நிலையில், இவரது அடுத்த படத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி, சாய் பல்லவி, கல்யாணி பிரியதர்ஷன், பிரியங்கா மோகன், மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிய இருப்பதாக தெரிகிறது.

Anirudh debuting in to malayalam industry Directed by Haneef Adeni

ஏற்கனவே, மைக்கேல் திரைப்படத்தில் நிவின் பாலியை வைத்து ஹனீப் இயக்கியிருந்த நிலையில், இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தில் மீண்டும் அவருடன் இணைகிறார் ஹனீப். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Anirudh debuting in to malayalam industry Directed by Haneef Adeni

மலையாளத்தில் முதன்முறையாக அனிருத் இசையமைப்பளராக பணிபுரிய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | குழந்தை பிறப்புக்கு நயன்தாரா & விக்கியை தனது ஸ்டைலில் வாழ்த்திய அட்லி & காஜல் அகர்வால்!

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh debuting in to malayalam industry Directed by Haneef Adeni

People looking for online information on Anirudh, Anirudh Ravichander, Haneef Adeni will find this news story useful.