www.garudabazaar.com

Happy Birthday Anirudh : இளம் இசையமைப்பாளர் அனிருத் பிறந்த நாள்.. வாழ்த்து சொன்ன முன்னணி இயக்குநர்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு பிடித்தமான பாடல்களை கொடுத்துவரு இசையமைப்பாளர் அனிருத்துக்கு இன்று பிறந்தநாள்.

Happy Birthday Anirudh Vigniesh shivan and film industry wishes

கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 எனும் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமானவர் அனிருத் ரவிச்சந்தர். அவரது இசையில் உருவான ‘கொலைவெறி’ பாடல் உலகமெங்கும் ஒலிப்பதற்கு காரணமாக இருந்தார். அவருடைய இசையில் உருவான இந்த பாடலை தொடர்ந்து அடுத்த சில வருடங்களில் வணக்கம் சென்னை திரைப்பட பாடல்கள் தொடங்கி பல பாடல்களும் அனிருத் இசையில் ஹிட் அடித்த பாடல்களாக இருந்தன.

குறிப்பாக, எதிர்நீச்சல், ரெமோ, ரம், வேலையில்லா பட்டதாரி, கத்தி, வேதாளம், விவேகம், வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா, தர்பார், மாஸ்டர் டாக்டர் அண்மையில் விக்ரம் வரை பல திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்தார் கமலஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் அனைவரின் திரைப்படங்களுக்கும் அவர் குறுகிய காலத்தில் இசையமைத்து கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு அசைக்க முடியாத இடத்தில் உள்ளார்.

2022 ஆம் ஆண்டு அனிருத் இசையில் பீஸ்ட், நாய் சேகர் படத்தில் ஒரு பாடல், காத்து வாக்குல ரெண்டு காதல், டான், கமல் நடித்த விக்ரம், தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் என பல திரைப்படம் வெற்றி பெற்றதாக இந்த திரைப்படங்களின் பாடல்கள் பலரது விருப்ப பாடல்களாகவே மாறிவிட்டன. இந்நிலையில் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன், தம்முடைய வாழ்த்துக்களை அனிருத் பிறந்தநாளுக்காக தெரிவித்து தம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்டு இருக்கிறார்.

அவருடைய வாழ்த்தில், மிகவும் இனிமையான க்யூட்டான நண்பர் என்று அனிருத்தை குறிப்பிட்டிருக்கும் விக்னேஷ் சிவன், அனிருத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி ஆசீர்வதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி இருக்கிறார். என்றும் அவரிடத்தில் புன்னகை ஒளிர வேண்டும் என்றும் அவர் அனிருத்தை குறிப்பிட்டிருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் பலரது திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்றிருக்கின்றன.

அடுத்ததாக அனிருத் இசையில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினி நடித்துவரும் ஜெயிலர் திரைப்படம், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் ஜவான் திரைப்படம், கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2-ஆம் பாகம், அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் திரைப்படம் உட்பட பல படங்களுக்கு அனிருத் இசை அமைக்கிறார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Happy Birthday Anirudh Vigniesh shivan and film industry wishes

People looking for online information on Anirudh birthday, Anirudh Ravichander, Anirudh Ravichander birthday, அனிருத், Happy Birthday Anirudh will find this news story useful.